செய்யாறு அரசு கல்லூரியில் ஆய்வகங்கள் அமைக்க பூமி பூஜை

செய்யாறு அரசு கல்லூரியில் ஆய்வகங்கள் அமைக்க நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. ஜோதி தொடங்கி வைத்தார்

Update: 2023-01-28 02:08 GMT

 புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த ஜோதி எம்.எல்.ஏ

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக புதிய ஆய்வகங்கள் கட்டிடம் ரூ. 5.28 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ராம் ரவி, கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , செய்யாறு நகர மன்ற உறுப்பினர்கள்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள்  , திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சாலை விபத்தில் குழந்தையை இழந்த குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஜோதி  ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினாா்.

செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சோந்த ராஜா - சத்யா தம்பதியின் மகள் ஜனனி (3), கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி,  நேரில் சென்று ராஜா - சத்யா தம்பதியினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாா். 

அப்போது, அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மோ.ரவி, திமுக நிா்வாகி  வெங்கடேசன், ஒன்றிய குழு துணை தலைவர் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் , ஒன்றிய குழு செயலாளர் , வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News