திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் எம்.எல்.ஏ. ஜோதி போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,408 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2,048 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாம்களில் 8,055 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முகாம்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அருணாசலேஸ்வரர் கோவில், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகில் நடந்தது. அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 474 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் எம்.எல்.ஏ. ஜோதி போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களும் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் வட்டார மருத்துவர் ஷர்மிளா மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.