செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை

செய்யாற்றில் அரசு பேருந்து நடத்துநர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Update: 2024-05-17 01:45 GMT

செய்யாறு பேருந்து நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட பேருந்து நேற்று மாலை 5 மணிக்கு செய்யாற்றில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்தது.  அந்த அரசு பேருந்தில் நடத்துநராக பரதன்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர் சிறுநீர் கழிக்க பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு திரும்பினாராம். அப்போது கழிவறையில் உள்ள குழாயை சரியாக மூடவில்லை என கூறப்படுகிறது.  அப்போது அங்கு இருந்த ஆட்டோ டிரைவரான செய்யாறு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நடத்துநர் பெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு இருந்த கட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த நடத்துநர்  சக பணியாளர்கள் உதவியுடன் செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார் . இதனிடையே ஆட்டோ டிரைவர் மணிகண்டனும் செய்யாறு காவல்நிலையத்தில் அளித்த புகாரில்,  செய்யாறு பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறை நான் கடந்த ஓராண்டாக பராமரித்து வருகிறேன் .  அரசு பேருந்து நடத்துநர் பெருமாள் கழிவறையில் உள்ள குழாயை மூடாமல் சென்றதை கேட்டேன் .  அதற்காக என்னை ஜாதி பெயரை கூறி ஆபாசமாக திட்டினார். அப்போது தடுக்கும் போது வழுக்கி கீழே விழுந்து தனக்கு காயம் ஏற்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு புகாரின் பேரில் செய்யாறு காவல்ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் செய்யாறு பேருந்து நிலையத்தில் நேற்று மாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News