திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

Update: 2022-03-14 07:28 GMT

திருவண்ணாமலை மாவட்ட சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன்  தூசி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் தலைமையில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம் கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி குவாரிகளை நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.

மேலும் தூசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள் ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குவாரி வாகனங்கள் காலை 08 மணி முதல் 09 மணி வரையிலும் மாலை 04.30 மணி முதல் 06 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும் , லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும் தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும் என்றும் மாமுல் கொடுக்க வேண்டும் என்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் தூசி காவல் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் உடனிருந்தார்.

Tags:    

Similar News