செய்யாறு பகுதியில் உள்ள கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செய்யாறு பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.;

Update: 2022-05-03 06:56 GMT

நெல் கொள்முதல் நிலையங்களை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிறுநாவல் பட்டு, கடுகனூர், நாட்டேரி. ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜ்குமார், வேளாண்துறை அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News