செய்யாறு அருகே தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
செய்யாறு வட்டம் கடுகானூர் கிராமத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்';
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூபாய் 25 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா கடுகானூர் கிராமத்தில் நடைபெற்றது.செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீர் நிலையத்தை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியையொட்டி அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.