செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் தரைப்பாலம்

செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் கட்டப்பட்ட தரைப்பாலத்தை எம்எல்ஏஜோதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்;

Update: 2022-01-21 07:17 GMT

செய்யாறு அருகே பாலாற்றில் ரூபாய் 20 லட்சத்தில் தரைப்பாலம் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம்  வட இலுப்பை - பெரும்பாக்கம் கிராமங்கள் இடையே ஓடும் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டு இருந்தது.

நெடுஞ்சாலைத் துறை மூலம் வெள்ள நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சத்தில் தற்காலிக தரைப்பாலம்  அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்தது. 150 மீட்டர் நீளம் , 5 மீட்டர் அகலம் கொண்ட தற்காலிக  தரை பாலத்தை நெடுஞ்சாலை துறையினர் மிக விரைவாக கட்டி முடித்தனர்.

இதன் திறப்பு விழா மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில்  நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணராஜா,  உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News