மழை பாதித்த பகுதிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

செய்யாறு அருகே மழை பாதித்த பகுதிகளில் வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியை செய்யாறு எம்எல்ஏ பார்வையிட்டார்;

Update: 2021-11-10 12:14 GMT

மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட செய்யாறு எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அதிகபட்சமாக 53 மில்லி மீட்டர் மழை பதிவானது. செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை பாதித்த பகுதிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கிராமங்களில் குடிசைப் பகுதிகளில் தெருக்களில் புகுந்த வெள்ள நீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து வெளியேற்றுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர், செய்யாறு நகராட்சி ஆணையர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News