செய்யாறில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ.
செய்யாறில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி துவக்கி வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் செய்யாறு உதவும் கரங்கள் மற்றும் நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து கொரோனா இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தியது. செய்யாறு உதவும் கரங்கள் தலைவர் ஆதிகேஷன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிபாலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்துகொண்டு பூஸ்டர் தடுப்பூசியை அவர் செலுத்தி கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா தலைமையிலான டாக்டர் ராதிகா, செவிலியர்கள் சூர்யா, ரஞ்சிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட 40 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு முககவசமும், மரக்கன்றும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவும் கரங்கள் நிர்வாகிகள் சிவானந்தகுமார், தேன்மொழி, பாரதி, குப்புசாமி, அமுதசுரபி அன்னதான இயக்குனர் காந்தி, பூபதி, நகரமன்ற உறுப்பினர் கோவேந்தன், ஒன்றிய செயலாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.