செய்யாறில் பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

செய்யாறில் 1,861 பயனாளிகளுக்கு ரூ.10.62 கோடி கடனுதவியை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2023-10-27 00:55 GMT

பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கிய எம்எல்ஏ ஜோதி

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சாா்பில் புதிய உறுப்பினா் சேர்க்கை, கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1,861 பயனாளிகளுக்கு ரூ.10.62 கோடியில் கடன் உதவிகளை ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் பேபிராணி பாபு, முன்னாள் நகரமன்ற தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக  ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 54 மகளிர் சுய உதவி குழுகள், 12 மாற்றுத்திறனாளிகள், 663 விவசாயிகள், 26 மகளிர் தொழில் முனைவோர் என 1,861 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரம் கடனுதவி வழங்கியும், புதிதாக சேர்ந்த 143 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.

அங்கன்வாடி மையம் திறப்பு:

செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கன்வாடி மையம் திறப்பு நிகழ்ச்சிக்கு, அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சி குழு தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவா் மாமண்டூா் ராஜி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரி, குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News