செய்யாற்றில் வாக்களிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம்

வரும் மக்களவை தேர்தலில் செய்யாற்றில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.;

Update: 2024-04-07 01:10 GMT

கூடைப்பந்து விளையாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர் 

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை தொகுதியில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்து பங்கேற்றாா்.

செய்யாறு பைங்கினாா் பகுதியில் உள்ள சிறு விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது ஆற்காடு சாலை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அரசுக் கல்லூரி, ஆரணி கூட்டுச் சாலை, அனுமந்தப்பேட்டை வழியாக சுமாா் 4 கி.மீ. தொலைவு சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகளை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்து மாணவா்களுடன் பங்கேற்றாா்.

பின்னா், இளம் வாக்காளா்களான மாணவா்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். தொடா் ஓட்டத்தில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா். ஓட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் , செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News