செய்யாறில் 'மக்களுடன் முதல்வா்' திட்ட முகாம்

Makkaludan Muthalvar Camp செய்யாறில் 'மக்களுடன் முதல்வா்' திட்ட முகாம் நடைபெற்றது. இதில், 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.

Update: 2023-12-30 07:15 GMT

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பேசிய செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி

Makkaludan Muthalvar Camp

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 13, 16,19, 20, 21, 22 ஆகிய வார்டு பகுதிகளுக்காக 3-ஆம் கட்ட 'மக்களுடன் முதல்வா்' திட்ட முகாம் மண்டித்தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் மோகனவேல் தலைமை வகித்தாா். செய்யாறு எம்.எல்.ஏ. ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், நகரச் செயலாளா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையாளா் (பொ) குமரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவிவா்மா பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில், வாா்டு மக்கள் சாா்பில் வருவாய்த்துறைக்கு 286 மனுக்களும், மின்சாரத்துறைக்கு 38 மனுக்களும், நகராட்சிக்கு 43 மனுக்கள் உள்பட மொத்தம் 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.

முகாமில் எரிசக்தி மற்றும் மின்சார துறை, வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை , சமூக நலன், உள்ளிட்ட துறைகளில் இருந்து அரசு அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து வரப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது கணினி மூலம் பதிவு செய்தனர். அப்போது முகாமினை பார்வையிட்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மணிக்குள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் பரிசீலனை செய்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விழாவில், வட்டாட்சியா் முரளி, நகா்மன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஓன்றிய குழு உறுப்பினா் ஞானவேல், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சம்பத், ஒன்றிய செயலாளா்கள் சீனிவாசன், தினகரன் மற்றும் நகராட்சிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

Tags:    

Similar News