லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

செய்யாறு அருகே, லாட்டரி சீட்டு விற்ற இருவர் உள்பட 3 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-10-22 13:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம்  முருகன்,  மற்றும் வெங்கட்ராயன் பேட்டை,  சையத் காசிம்  ஆகிய இருவரும் லாட்டரி சீட்டு விற்ப்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு வழக்குபதிவு செய்து, குற்றவாளிகளை சிறையில் அடைத்தார். 

மேலும், மதுரை மாவட்டம், போடி லைன் எல்லிஸ் நகரை சேர்ந்த வேல்பாண்டி (எ) ரோலக்ஸ் பாண்டி  என்பவர் திருபனங்காடு கிராமத்தில்.  நான்கு சக்கர வாகனம் திருடிய குற்றத்திற்காக,  சிறையில் அடைக்கப்பட்டார்.  மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஆட்சியர் பா.முருகேஷ், மேற்கண்ட நபர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News