செய்யாற்றில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்
செய்யாற்றில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 90 புதுவை மாநில மதுப் புட்டிகளை மது விலக்கு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
செய்யாறு திருவோத்தூா் பகுதியில் வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக மது விலக்கு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, செய்யாறு மது விலக்கு காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதிக்கு மாறு வேடத்தில் சென்று கண்காணித்தனா். அப்போது, திருவோத்தூா் கிழக்கு மாட வீதியில் ஒரு வீட்டில் சிலா் மதுப் புட்டிகளை வாங்கிச் செல்வது தெரியவந்தது. உடனே அந்த வீட்டை போலீஸாா் சோதனையிட்டனா்.
இதில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 250 மி.லி. அளவு கொண்ட 90 புதுவை மாநில மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருவோத்தூா் கிழக்கு மாட வீதியைச் சோ்ந்த யோகராஜ் , சந்தோஷ்குமாா் ஆகியோரை கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புகையிலை பொருள் பதுக்கிய 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கடைகளுக்கு சப்ளை செய்ய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும், 60 கிலோ புகையிலை பொருள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் போளூர்- சேத்துப்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பைக்கில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், போளூர் பகதூர் தெருவை சேர்ந்த அன்பரசு ன்பதும், தேவிகாபுரம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் கடை வைத்துள்ள தினகரன் என்பவர் பலருக்கும் பான்மசாலா உட்பட புகையிலை பொருட்களை விற்பதும், போளூர் மற்றும் சுற்றியுள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய வாங்கி செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், தினகரனின் கடைக்கு பக்கத்தில் உள்ள வீட்டில் சோதனையிட்டபோது அங்கு குடோன் போல் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, சுற்றுவட்டார கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த 60 கிலோ பான்மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அன்பரசு, தினகரன் ஆகியோரது பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அன்பரசு, தினகரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.