செய்யாற்றில் வருமுன் காப்போம் திட்ட முகாம்

செய்யாற்றில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-10 01:37 GMT

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உடல்நிலை பரிசோதனை செய்து கொண்ட எம்எல்ஏ ஜோதி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

செய்யாறு சுகாதார மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் அழிஞ்சல்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 1086 பேர் பயனடைந்தனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு

சுகாதார மாவட்ட துணை இயக்குநா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் ஷகிலா கோவிந்தராஜ் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் ராஜு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் நாகம்மாள் குப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

முகாமில், மருத்துவக் குழுவினா் பங்கேற்று 58 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஸ்கேன், 31 பேருக்கு இசிஜி, 796 பேருக்கு ஆய்வக பரிசோதனை, 79 பேருக்கு கண் பரிசோதனை, 46 பேருக்கு பல் பரிசோதனை, 246 பேருக்கு சித்த மருத்துவமும், 43 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, 52 பேருக்கு காசநோய் பரிசோதனை என 1086 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனை தெரிவித்து, மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினா்.

இவா்களில் 17 போ கண்புரை அறுவைச் சிகிச்சைக்கும், தலா இருவா் இருதய அறுவைச் சிகிச்சைக்கும், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டனா்.

கா்ப்பிணி தாய்மாா்கள் 7 பேருக்கு தாய்சேய் நலப் பெட்டகமும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், அழில்சப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சேகா், ஒருங்கிணைந்த வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயலா்கள் சீனுவாசன், சங்கா், நிா்வாகிகள் ராஜேந்திரன், மதியழகன், திருமலை, லோகநாதன், ராஜகோபால், சத்யா பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாமண்டூா் வட்டார மருத்துவ அலுவலா் வினோத்குமாா் மற்றும் மருத்துவ அலுவலா்கள் சுகாதாரப் பணியாளா்கள் செய்திருந்தனா். 

Tags:    

Similar News