செய்யாறு பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கிய ஜோதி எம்.எல்.ஏ.

செய்யாறு பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் போனஸ் தொகையை ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-10-02 11:23 GMT

பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையினை வழங்கிய ஜோதி எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் மண்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் கூடுதல் கொள்முதல் விலைத் தொகையான போனஸ் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார் . மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,  மேலாளர் ரமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதி,  பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கி, 

பால் உற்பத்தியாளர்கள் தரமான தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ,   கூட்டுறவு பால் உற்பத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முதன்மையான சங்கமாக செய்யாறு கூட்டுறவு சங்கம் திகழும் என்றும் பேசினார்.

கூட்டுறவு சங்கத்தில் கடந்த  20 - 21 ஆம் ஆண்டில் பால் கறவை செய்த பால் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் சங்கம் ஏற்கனவே வழங்கிய பால் கொள்முதல் விலையுடன் கூடுதல் கொள்முதல் விலையாக ரூபாய் 47 லட்சத்து 89 ஆயிரத்து 538, தொகையினை போனசாக வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கூட்டுறவு சங்க செயலாளர் அறிவித்தார்.

முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கூடுதல் கொள்முதல் விலை போனஸ் தொகையினை பலருக்கு வழங்கி முறைப்படி எம்.எல்.ஏ. ஜோதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஸ்வநாதன்  ,.  மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத் ,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ,  ஒன்றிய செயலாளர்கள் ,  சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் ,  கூட்டுறவு சங்க தலைவர்கள்  , மற்றும்  செயலாளர்கள் கூட்டுறவு சங்க பதிவாளர்கள் ,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News