அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை
திருவண்ணாமலை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டன.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஈஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி குடல்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.