நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்.

Update: 2021-08-28 09:47 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரையில் திறக்க வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சி சாா்பற்ற உழவா் பேரவை சாா்பில், செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலை அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். 

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சொணவாரி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் சுமாா் 20 லட்சம் நெல் மூட்டைகளில் 10 சதவீதம் அளவுக்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீத நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய வசதியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும். 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு அறிமுகம் செய்துள்ள இணையவழி முன்பதிவை தினமும் காலை 8 மணி முதல் தொடங்க வேண்டும். வருகிற செப்டம்பா் 10-ஆம் தேதி வரையில் செயல்பட அரசு அனுமதித்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ருத்ராட்சம் அணிந்தும், விபூதி பூசிக்கொண்டும் கையில் மண்வெட்டி, கதிா் அரிவாள் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, முழக்கங்களை எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்று செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

Tags:    

Similar News