தொடர் மழை காரணமாக செய்யாறு பகுதியில் வீடுகள் சேதம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் தொடர் மழையினால் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. ஒரு கர்ப்பிணிப் பெண் காயமடைந்தார்.;
செய்யாறு வெம்பாக்கம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பல வீடுகள் இடிந்தன.
இந்நிலையில் செய்யாறு அருகே உள்ள மகாஜனம் பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகத்தின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் ஆறுமுகத்தின் மனைவி மற்றும் கர்ப்பிணி மகள் , இரண்டு வயது குழந்தை என நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர் . அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். காயமடைந்த கர்ப்பிணி பெண் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த செய்யாறு எம்எல்ஏ ஜோதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குடும்பத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி மருத்துவ செலவிற்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார் . மேலும் தொகுப்பு வீடு வழங்க பரிந்துரை செய்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர்கள் , வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.