செய்யாறில் இடி மின்னலுடன் பலத்த மழை!
செய்யாறில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது, ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விட்டுவிட்டு பரவலான மழை பெய்து வருகிறது.
அதன்படி, செய்யாறில் நேற்று காலை முதல் நேற்றுமாலை வரை சுளீரென்று சுட்டெரித்த வெயில் வாட்டி வதைக்கையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் வட தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் நகர் பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் நேற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் பரவலாக இடி மின்னலுடன் கன மழையாக பெய்தது. காலை முதல் மாலை வரை சுளீரென்று சுட்டெரித்த வெயில் வாட்டி வதைக்கையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. அதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கலசப்பாக்கம் பகுதியில் தூறல் மழை
கலசப்பாக்கம் மற்றும் சுற்று கிராமங்களான மேல் சோழங்குப்பம், ஆதமங்கலம் ,தென்பள்ளிப்பட்டு, காங்கேயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. மேலும் ஜவ்வாது மலை, ஜமுனா மரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் செய்யாறு நாக நதி, அமர்த்தி , கண்ணமங்கலம் ஏரி கொளத்தூர் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.