திருவண்ணாமலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலையில் ஆதரவற்ற பெண்கள் இலவச தங்கும் இல்லம் சிறப்பாக செயல்படுகிறது என்று, மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்தார்.

Update: 2024-06-14 03:22 GMT

செய்யாற்றில் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட மகளிர் ஆணைய தலைவர்

திருவண்ணாமலையில் ஆதரவற்ற பெண்கள் இலவச தங்கும் இல்லம் சிறப்பாக செயல்படுகிறது என்று, மாநில மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்தார்

திருவண்ணாமலையில் இயங்கிவரும் ஷக்தி சதன் ஆதரவற்ற பெண்கள் இலவச தங்கும் இல்லம் (நேசம் தொண்டு நிறுவனம்) சிறப்பாக செயல்படுவதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் செய்யாறில் முதியோர் இல்லம், பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தையும், திண்டிவனம் சாலையில் இயங்கும் கிரேஸ் முதியோர் இல்லத்தையும் ஆய்வு செய்த அவர், திருவண்ணாமலை வேட்டவலம் சாலை திருவள்ளுவர் நகரில் இயங்கிவரும் நேசம் தொண்டு நிறுவனத்தையும் ஷக்தி சதன் ஆதரவற்ற பெண்கள் இலவச தங்கும் இல்லம்) இல்லத்தையும் மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி நேரில் பார்வையிட்ட அவர், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு உறுதி மொழியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள் இல்ல அலுவலக பணியாளர்கள் ஆகியோருடன் உறுதிமொழியினை ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருவண்ணாமலையில் இயங்கிவரும் நேசம் தொண்டு நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாகவும், முதியோர்க ளு க்கு பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். காலை மாலை இரவு நேரங்களில் தவறாமல் உணவு வழங்கிட வேண்டும். மேலும் இல்லத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மாவட்டம் முழுவதும் உள்ள முதியோர் இல்லம், பெண்கள் பாதுகாப்பு இல்லம் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா சமூக நலத்துறை பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கோமதி நேசம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஷாலினிராபின், பெனடிக் ராபின் இல்ல அலுவலக பணியாளர்கள் சிந்து ஜோதி, சோனலி, லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்யாறு முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்ல செயல்பாடு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகில் உள்ள கீழ் புதுப்பாக்கம் பகுதியில் செயல்படும் முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்தை மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்பொழுது செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா ஆகியோர் உடன் இருந்தனர். முதியோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லம் இயங்கும் விதம், உணவு, பாதுகாப்பு, மருத்துவம், உடல் நலன் சார்ந்த தேவைகள் குறித்து கேட்டு கேட்டறிந்தார்.. மேலும் பெண்கள் பாதுகாப்பு இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Similar News