அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் பஞ்சரான அரசு பேருந்து

செய்யாறில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் அரசு பேருந்து டயர் பஞ்சராகி மாணவர்கள் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

Update: 2022-03-23 09:45 GMT

அதிக பயணிகளை ஏற்றியதால் நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பேருந்து

செய்யாறில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில்  , ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தினமும் ஆரணி பகுதியிலிருந்து செய்யாறு அரசு கலைக்கல்லூரிக்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு நகர பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

அதில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக மாணவ, மாணவிகள் உள்பட ஆட்கள் ஏற்றப்படுவதால் பல நேரங்களில் நடுவழியிலேயே பேருந்துகள்  பழுதாகி நின்று விடுகின்றன.இந்த நிலையில்  காலை ஆரணியில் இருந்து செய்யாறுக்கு புறப்பட்ட அரசு பேருந்தில்  கல்லூரி மாணவர்களும், எஸ்.வி. நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய பள்ளி மாணவர்களும் பயணித்தனர். அளவுக்கு அதிகமாக மாணவர்கள் ஏறி சென்றதால், இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் அருகே சென்றபோது அழுத்தம் தாங்காமல் பேருந்து டயர் பஞ்சரானது.நடு வழியிலேயே டயர் பஞ்சராகி நின்று விட்டதால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

ஆரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் உடனடியாக மாற்று பேருந்தை  அனுப்பினர்.  இதனால் சுமார் அரை மணி நேரம் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

Tags:    

Similar News