திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவாலயங்களில் புனித வெள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-15 12:39 GMT

செய்யாறில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தின் சார்பில் கிறிஸ்தவர்கள் இன்று காலை புனித வெள்ளியை முன்னிட்டு ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயேசுவை சிலுவையில் அறைந்தது நினைவூட்டி சிலுவை சுமந்த படி ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் நெடுங்குணம் மாதா மலைக்கு சிலுவை ஏந்தி பயணம் நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சிலுவைப் பாதை பயணம் நடைபெற்றது.

இதில் கிறிஸ்தவர்கள் சிலுவையைத் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். வேட்டவலம் மலையில் உள்ள புனித தேவாலயத்திற்கு சிலுவைப்பாதை எடுத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News