செய்யாறு நகரில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம்
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு நகரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது;
![செய்யாறு நகரில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு நகரில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம்](https://www.nativenews.in/h-upload/2021/08/20/1500x900_1255341-workplace-screening-camps.webp)
மாதிரி படம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
முகாமின் போது கண்புரை அறுவை சிகிச்சை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மற்றும் வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் மேல் சிகிச்சை தேவைப்படுவோர் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். குடும்ப அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது