ஆடு வாங்க பணத்துடன் சென்ற விவசாயி: பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஆடு வாங்க உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு சென்ற விவசாயியிடம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்;

Update: 2022-01-30 13:39 GMT

துணை தாசில்தார் ஸ்ரீதேவி தலைமையில் பறக்கும் படையினர் காஞ்சீபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

செய்யாறில் துணை வட்டாட்சியர்  ஸ்ரீதேவி தலைமையில் பறக்கும் படையினர் காஞ்சீபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தவசி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் ஆடு வாங்க சிறுவேளியநல்லூர் கிராமத்திற்கு செல்வதாக தெரிவித்தார்.

அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.59 ஆயிரத்து 300 கொண்டு சென்றதால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமனிடம் ஒப்படைத்துள்ளனர்.

போளூர் பேருந்து நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டியன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.50 லட்சம் எடுத்து வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மணி நகை அடகு வைத்து பணம் பெற்றதற்கான ரசீதினை வீட்டுக்கு சென்று எடுத்து வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமனிடம் காண்பித்தார். பின்னர் பறிமுதல் செய்த பணம் மணியிடம் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News