செய்யாறில் 281 கம்மல்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி

செய்யாறில் பறிமுதல் செய்யப்பட்ட கம்மல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.;

Update: 2022-02-11 13:48 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கம்மல்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் 3 சுற்றுகளாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில், மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதேவி தலைமையிலான பறக்கும் படை நிலை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம், 281 தங்க கம்மல்கள் இருந்தன. சரியான ஆதாரம் இல்லாததால், கம்மல்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பறிமுதல் செய்யப்பட்ட கம்மல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படை குழுவினர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News