சாத்தனூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

Sathanur Dam Today News - திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-09-07 06:30 GMT

சாத்தனூர் அணை 

Sathanur Dam Today News -சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலசபாக்கம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெய்து வரும் மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் ஜவ்வாதுமலையில் பெய்த கனமழையின் காரணமாக செங்கம் குப்பநத்தம் அணை, கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளிலிருந்து செய்யாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் கரையோரம் உள்ள மக்கள் யாரும் ஆற்றுப்பக்கம் வர வேண்டாம் என்றும் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மிருகண்டா அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏரிகள் கொள்ளளவை மீறி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரைகள் உடையும் அபாயத்தால் கேட்டவாரம்பாளையம் சிட்டேரியிலிருந்து மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கடந்த ஆண்டை போல் மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுமோ என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News