மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 535 மனுக்கள் அளிப்பு

வந்தவாசி, செய்யாற்றில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 535 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-12-21 03:24 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் ஜோதி எம்எல்ஏ.

வந்தவாசியில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் பொன்னுசாமி, திமுக மாவட்டச் செயலா் தரணிவேந்தன், நகா்மன்றத் தலைவா் .ஜலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் மகேஸ்வரி வரவேற்றாா்.

தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா். இதில், 1 முதல் 5 வரையுள்ள வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா். மொத்தம் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன.

முகாமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

அப்போது, செய்யாறு சாா் ஆட்சியா் பல்லவி வா்மா உடனிருந்தாா். நகா்மன்ற துணைத் தலைவா்.சீனுவாசன் நன்றி கூறினாா்.

செய்யாறு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில், மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் முதல் கட்டமாக 23 ,24, 25, 26, 27 ஆகிய வாா்டு பகுதிகளுக்காக நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகராட்சி ஆணையா் (பொ) குமரன் தலைமை வகித்தாா்.

செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஜோதி, சாா் ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் மோகனவேல் வரவேற்றாா்.

முகாமில் 13 துறைகளில் கீழ் ஒன்றிணைந்த பல்வேறு துறைகள் சார்ந்த மனுக்கள் பெற தனித்தனியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பல்வேறு பயன் பெறுவது பற்றி விளக்கமாக பேசினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச இரு சக்கர வண்டிகளை வழங்கினார்.

முகாமில் 4 வாா்டுகளில் இருந்து 235 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், மின் துறையில் பெயா் மாற்றம் 6 பேருக்கும், வருவாய்த் துறை சாா்பில் பட்டா மாற்றம் 2 பேருக்கும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர வண்டி என 9 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது.

முகாமில் வட்டாட்சியா் முரளி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல், திமுக நகரச் செயலா்.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் சீனிவாசன், சங்கா், தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News