செய்யாறு ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு ஆர்.டி-.ஓ. அலுவலகம் முன்பு கத்தி, கடப்பாரை, விஷபாட்டிலுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் வேலை 9 மணிக்கு மேல் இருந்தது. ஆனால் தற்போது காலை 7 மணி அளவில் வர சொல்வதால் காலையில் சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. விவசாய பணிகளும் பாதிக்கப்படுவதால் 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதனால் வருகைப்பதிவு நேரத்தை பழைய நடைமுறைப்படி காலை 9.30 மணி அளவில் ஆன்லைன் வருகை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து விவசாய சங்கத்தினர் மண்வெட்டி, கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களை கட்டி அவசர அவசரமாக செல்வது போலவும், மேலும் விஷ பாட்டிலுடன் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
பின்னர். இது குறித்து கண்காணிப்பு அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.