செய்யாறு அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
செய்யாறு அருகே வயல்வெளியில் சென்ற விவசாயி மின்னல் தாக்கி மரணமடைந்தார்;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வகுமார் இவர் நேற்று இரவு வயல்வெளி பகுதியில் கட்டி வைத்திருந்த மாடுகளை அவிழ்த்து வரச் சென்றார். அப்போது திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது விவசாயி செல்வகுமார் மீது மின்னல் பாய்ந்தது அவர் மயக்கமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அனைத்து காவல் உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.