செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாவட்ட அரசு இதழில் வெளியிடப்பட்டது.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவெற்றியூர் செய்யாறு நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு அருகில் உள்ள ஒன்பது கிராமங்களை இணைப்பதற்கான அறிவிப்பு திருவண்ணாமலை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
திருவத்திபுரம் நகராட்சி 27 வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் நகர எல்லை விரிவாக்க திட்டத்தின் கீழ் திருவத்திபுரம் நகராட்சி உள்ளூர் திட்டமிட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அருகில் உள்ள வட தண்டலம் , கீழ் புதுப்பாக்கம் அணைக்காவூர் , கீழ் மட்டை , செய்யாற்றை வென்றான் , பைங்கினர் , தவசி, வெள்ளை, புளியரம்பாக்கம் ஆகிய ஒன்பது கிராமங்கள் நகராட்சியுடன் இணைக்கப்ப ட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரணி நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி நகராட்சியுடன் ராட்டிணமங்கலம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியுடன் ராட்டிணமங்கலம் ஊராட்சியை இணைக்க போவதாக வந்த அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்டிணமங்கலம் ஊராட்சி மன்றம் எதிரில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வத்திடம், பொதுமக்கள் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கந்தன், வார்டு உறுப்பினர்கள் குமார், பரியாஜெலேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.