ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்
செய்யாறு அருகே ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றினார்கள்.
செய்யாறு தாலுகா பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின்கீழ் செயல்பட்டு வரும் தொழுப்பேடு மற்றும் எறையூர் கிராமங்களில் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 5 ஏக்கரை ஆக்கிரமித்து பயிர் செய்யப்பட்டு வந்தது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்பேரில், நீர்வள ஆதார துறை உதவி பொறியாளர் மு.ஹரிப்ரியா தலைமையில், வருவாய் ஆய்வாளர் தண்டபாணி, விஏஓக்கள் பிரகாஷ், சிவகுமார் முன்னிலையில், செய்யாறு போலீசார் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.