செய்யாறு அருகே ஏரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு
செய்யாறு வட்ட கிராமங்களில் ஏரி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டது.;
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலத்தை பொதுப்பணித் துறையினர் மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்காடு, வாசனூர், ஆகிய கிராமங்களில், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், ஆக்கிரமிக்கப்பட்ட 11 ஹெக்டேர் நிலத்தை பொதுப்பணித் துறையினர் மீட்டனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி நீர் பிடிப்பு பகுதியில் 21 நபர்கள் 7 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இதனை பொதுப்பணித்துறை பொறியாளர் ராகவேந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர்.
அதேபோல் வாசனூர் கிராமத்தில் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் வந்தவாசி வடக்கு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் 11 நபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த 3 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி நிலத்தை மீட்டனர்.