அரசு பெண்கள் பள்ளியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு

செய்யாறு அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரியதர்ஷினி ஆய்வு செய்தார்.

Update: 2021-12-16 06:54 GMT

மாணவர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட வருவாய் அதிகாரி பிரியதர்ஷினி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசால் மாதிரி மேல்நிலைப்பள்ளியாக அறிவிக்கப்பட்டு 2021-2022-ம் கல்வி ஆண்டில் எல்.கே.ஜி. முதல்    5-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், மாணவர்கள் பலர் சேர்ந்து படித்து வருகின்றனர்.

செய்யாறுக்கு ஆய்வுக்காக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தொடக்கப்பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

மாணவர்களின் கல்வி திறனை பரிசோதிக்கும் விதமாக எளிமையான கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டபோது, மாணவர்கள் சரியாக பதில் அளிக்காத நிலையில் ஒரு சில மாணவர்கள் மட்டுமே சில கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்த உதவி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியர்களிடம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என அறிவுரை வழங்கி, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது செய்யாறு உதவி கலெக்டர் என்.விஜயராஜ் , வட்டாட்சியர் சுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News