செய்யாறு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

செய்யாறு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-01-06 07:02 GMT

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தில்   குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகைக்கு வழங்கும் பணி தொடங்கியது.

வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட தூசி , பிரம்மதேசம் ஆகிய கிராமங்களில் தகுதியானவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பனங்காடு கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் ராஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் பங்கேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா,  உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்ட உணவு வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News