செய்யாறு பகுதியில் விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு கருவி
செய்யாறு பகுதியில் விவசாயிகளுக்கு நேரடி நெல் விதைப்பு கருவியை எம்எல்ஏ வழங்கினார்.;
விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பு பொருட்களை வழங்கிய ஜோதி எம்எல்ஏ
செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் 13 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் வேளாண் துறை சாா்பில் இயங்கும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை மூலம் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயலா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், நேரடி நெல் விதைப்பு கருவி, நெல் மற்றும் மணிலா பயிரை அழிக்கும் காட்டுப் பன்றியை கட்டுப்படுத்தும் மருந்து என 13 விவசாயிகளுக்கு ரூ.78,100 மதிப்பிலான பின்னோ்ப்பு மானிய திட்ட இடுபொருள்களை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வெம்பாக்கம் வட்டார துணை வேளாண் அலுவலா் மரிய செளரிராஜ், வேளாண் அலுவலா்கள் சீனிவாசன், ஜெய்சங்கா், பயிா் அறுவடை பரிசோதகா் காா்த்தி, ஆத்மா திட்ட அலுவலா்கள் கங்காதரன், வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, வேளாண் அலுவலா் ரேணுகாதேவி வரவேற்றாா். ஆத்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளா் பத்மஸ்ரீ நன்றி கூறினாா்.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செய்யாறு வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும், புகைப்பட சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்
செய்யாறு வழியாக தென் மாவட்ட பகுதிகளுக்குச் செல்லும் தொலைநிலை பேருந்துகளை இயக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட புகைப்பட சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்யாற்றில் தனியாா் அரங்கில் நடைபெற்ற சங்கக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கலைராஜா தலைமை வகித்தாா்.
செய்யாறு புகைப்பட சங்கத் தலைவா் தசரதன், செயலா் நடராஜன், பொருளாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைச் செயலா் டி. ராஜி வரவேற்றாா்.
மாநில துணைச் செயலா் அசோக், மண்டலச் செயலா் மயிலாபுரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று சங்க உறுப்பினா் அடையாள அட்டையை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும். செய்யாறு வழியாக தென்மாவட்டப் பகுதிகளுக்குச் செல்லும் தொலைநிலை பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் வஞானவேல், தினகரன், புகைப்பட சங்க நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.