திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மைப் பணி ஆலோசனை கூட்டம்
திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் மகராசன் வரவேற்றார். நகரமன்றத் தலைவர் மோகனவேல், தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகள், பேருந்து நிலையம், காந்தி சிலை ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புறவு மேற்கொள்ளுதல், திடக்கழிவுகளை தரம் பிரித்தல், வீட்டுக் கழிவுகளை உரமாக்குதல், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து பொதுமக்கள், வணிகர்களுக்கு ஆலோசனை வழங்குதல், நகராட்சி பகுதியில் தேவையற்ற வகையில் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் முக்கிய இடங்களில் உள்ள சுவரொட்டிகளை முழுமையாக அகற்றுதல், நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள கட்டட கட்டுமான கழிவுகளை அப்புறப்படுத்துதல், நீர்நிலைகள் அதனை சுற்றியுள்ள திட்ட கழிவுகளை அகற்றுதல் மரங்கள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வியாபாரிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.