நகர வளர்ச்சிக்கு உதவ வரிபாக்கி செலுத்த ஆணையாளர்கள் வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த ஆணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளில் எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் 100% வரி மற்றும் வாடகை வசூல் செய்திருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை , ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய நகராட்சி ஆணையர்களும், போளூர், செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர்களும் நிலுவை வரி பாக்கிகளை இம்மாத இறுதிக்குள் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூலிக்க சிறப்பு முகாம்கள்
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள நகராட்சி கடைகள் மற்றும் வீட்டு வரி சொத்து வரி குடிநீர் குழாய் வழியாகிய அவற்றை வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என நகராட்சி ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே வரி மற்றும் வாடகை வசூல் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை நகராட்சியில் 45 சதவீதம் வரி வசூலை எட்டியுள்ளது இந்நிலையில் 100% இலக்கை எட்டிப் பிடிப்பதற்காக பல துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு வரி வசூல் முகாம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் சன்னதி தெருவில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் மற்றும் அக்னி லிங்கம் அருகில் உள்ள நகராட்சி கட்டிடத்தில் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் திருவண்ணாமலை நகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது வரி மற்றும் வாடகை பாக்கி இனங்களை துரிதமாக செலுத்தி திருவண்ணாமலை நகராட்சி 100% என்ற இலக்கை எட்டி பிடிக்க ஒத்துழைப்பு தர வேண்டுமென நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி நிலுவை ரூ.2 கோடியே 66 லட்சத்து 30 ஆயிரத்தை உடனே செலுத்தி வளா்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும் என்று நகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை செலுத்துவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் நகராட்சி அலுவலா்கள் அனைத்து வாா்டுகளிலும் தீவிர வசூல் பணியை மேற்கொள்ள உள்ளனா். மேலும், பிப்.28-க்குள் வரி நிலுவையை செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
ஆரணி
ஆரணி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் செலுத்த வேண்டிய நீண்ட நாள் நிலுவையில் உள்ள வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதற்காக நகராட்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் சிறப்பு வரி வசூல் மையம் தொடங்கப்பட்டு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வரி செலுத்த, வரி வசூல் மையம் செயல்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு நீண்ட நாள் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை செலுத்தி நடவடிக்கை எடுக்காதவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல், மார்ச் இறுதிக்குள் வரி வசூல் செலுத்த தவறும் வீடுகளில் குடிநீர் இணைப்புகள் கட்டாயம் துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேரூராட்சி
தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் என இதர வரிகளை இந்த மாதத்திற்குள் கட்டி முடிக்க பேரூராட்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் , செங்கம் , கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சிகளில் வரிபாக்கி உள்ள பேரூராட்சிகளில் வரிவசூலை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரிகளை சரியாக செலுத்தினால் தான் நகரின் வளர்ச்சி அடைய செய்ய முடியும். உங்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நகரம் வளர்ச்சி அடையாது. மக்கள் கேட்கும் வசதிகளை செய்ய வரிகள் கட்டுவது அவசியம். அதனை செலுத்தாமல் மக்களின் அடிப்படை வசதிகள் கேட்டால் எப்படி செய்ய முடியும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் நகர வளர்ச்சி முழுமையாக செய்ய இயலும். அனைவரும் நகர வளர்ச்சி அடைய வரிபாக்கி செலுத்தி வளர்ச்சிக்கு உதவவேண்டும் என நகராட்சி தலைவர்கள் பேரூராட்சி தலைவர் ஆணையர் செயல் அலுவலர்கள் பொது மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.