திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தியை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-20 02:31 GMT

மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் வருவாய் தீா்வாய கணக்குகளை சரி பார்க்கும் நிகழ்வான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடைப்பெற்றது.

மேற்படி 1433-ம் பசலி வருவாய்த் தீர்வாய கணக்கு தணிக்கை மற்றும் மனுக்கள் மீது தீர்வு காணும் நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டம், தூசி உள்வட்டத்திற்குட்பட்ட தூசி, குரங்கணில்முட்டம், சித்தாலப்பாக்கம், அரசாணிப்பாலை, வயலாத்தூர், கீழ்நாயக்கன்பாளையம், கிரிஜாபுரம், வாகை, அப்துல்ல புரம் , உக்கம்பெரும்பாக்கம், புதுப்பாளையம், மாத்தூர், மாங்கால், மாமண்டூர், குண்டியாந்தண்டலம், சுருட்டள், வடகல்பாக்கம் மற்றும் வாழவந்தல் ஆகிய 18 கிராம பொதுமக்களிடமிருந்து கீழ்கண்டவாறு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதில் பட்டா மாறுதல்-58, உட்பிரிவு பட்டா மாறுதல்-9, நில அளவை கருவி-5, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்-9, புதிய குடும்ப அட்டை கோரி-1, இலவச வீட்டு மனை பட்டா-26, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 8 இதர துறைகள்- 25, இதர மனுக்கள்-36 ஆக மொத்தம் 177 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அரக்குமார், அலுவலகமேலாளர் (பொது) ரவி, உதவி இயக்குநர் நிலஅளவைப் பதிவேடுகள் துறை திருநாவுகர சு மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற 1433 - ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம்) மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் , தூசி உள்வட்டத்திற்குட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 1433 ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா தலைமையில் தொடங்கியது. இந்த வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் 1433 ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா பெற்றுக் கொண்டார்.

வருவாய் தீர்வாய குறைதீர் கூட்டத்தில் தேசூர், மழையூர் உள்வட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், நில பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News