செய்யாறு அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
Tiruvannamalai Collector News Today -செய்யாறு வட்டத்தில் பெரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் முருகேஷ் திடீர் ஆய்வு செய்தார்;
Tiruvannamalai Collector News Today -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் பைங்கினர் தொடக்கப்பள்ளி மற்றும் உக்கம் பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களிடையே கலந்துரையாடினார். மேலும் மாணவர்களின் கல்வித்திறனை பரிசோதனை செய்தார். மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை குறித்தும், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்புத்திறனை பரிசோதனை செய்யும் வகையில் தொடக்கப்பள்ளி மாணவர்களை புத்தகங்களை வாசிக்க செய்தும், கேள்விகளை எழுப்பி பதில்களை கேட்டு அறிந்தும் மாணவர்களின் கல்வித்திறனை ஆய்வு செய்தார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் வருகை பதிவேடு, சமையல் கூட பதிவேடு, பொருட்களின் கையிருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்யாறு டவுனில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் ரூபாய் 3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆன பயணியர் விடுதி கட்டுமானத்தை பார்வையிட்டார்
அதனைத் தொடர்ந்து செய்யாறு அடுத்த புள்ள வாக்கம் ஏரியினை பார்வையிட்டார்
பின்னர் அதிகாரிகளிடம் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளை முறையாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தூசி மாமண்டூர் ஏரியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏரியின் முழு அளவு தண்ணீர் நிரம்பியுள்ளது அந்த நீரில் பூக்களை தூவினார்.
அதனைத்தொடர்ந்து செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டு உரிய ஆலோசனை வழங்கினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.
உள் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேடுகள், மருந்து கையிருப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையை சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் அங்கு ஏற்பட்டுள்ள அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது சார் ஆட்சியர் அனாமிகா செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி சீனிவாசன் ஒன்றிய தலைவர் ராஜி வட்டாட்சியர்கள் சத்தியம், சுமதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாண்டியன் , மருத்துவர்கள் செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , வட்டார வளர்ச்சி கல்வி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2