செய்யாறு வட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
செய்யாறு வட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் வட்டம் புதுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி அணுகும் அரசு துறைகளில் சேவையை அவர்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு எடுத்தது இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் வட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ஹரிஹரன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 7 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையும், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் ரூ. 53. 50 லட்சத்தில் வீடு பழுது பாா்ப்பதற்கான ஆணையும், வருவாய்த்துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு நலத் திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கிப் பேசினார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, எரிசக்தி துறை வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ,கூட்டுறவு துறை, நுகர்வோர் பாதுகாப்பு துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை ஆகிய துறை சார்பாக புதுப்பாளையம் கிராமத்தில் மக்களுடன் முதல் திட்டத்தைதொடங்கி வைத்து பல்வேறு அரசு துறைகளில் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
புதுப்பாளையம் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து வந்த பொது மக்களிடம் இருந்து 424 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.