செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா
செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற 1431-ம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு நாள் விழா மற்றும் விவசாய மாநாடு நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினர். தாசில்தார் சுமதி வரவேற்றார். திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் என்.வி.பாபு, திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, பங்கேற்று விவசாயி மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, கணனி மையம் மூலம் எல்லா ஆவணங்களையும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் திட்டத்தை முதன் முதலில் நமது முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தார். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். தற்போது ஊழலுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற நிலையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியவர் நமது கலைஞர் தான் இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்து மக்கள் பாராட்டும் அளவிற்கு பணி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக தாசில்தார் ராஜலட்சுமி நன்றி கூறினார்.