செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் விழா
செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது;
செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் 6.7.2022 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். நிகழ்ச்சிக்கு விழாக்குழு தலைவர் ருத்திரன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், கோயில் செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்றார் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகத்துக்கான பந்தக்கால் நடப்பட்டது.
திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஆணையாளர் ரகுராமன், தி.மு.க. நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விசுவநாதன், நகர செயலாளர் நகரமன்ற உறுப்பினர் கே.வெங்கடேசன், பாமகவை சேர்ந்த காத்தவராயன், சீனிவாசன், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஞானமணி சின்னதுரை, கார்த்திகேயன், கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபார்த்திபன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.