செய்யாறு ஸ்ரீ வேதபுரீசுவரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

Brahmotsavam Festival -செய்யாறு திருவோத்தூா் வேதபுரீசுவரா் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2023-01-23 02:00 GMT

திருவீதி உலா வந்த வேதபுரீஸ்வரர்

Brahmotsavam Festival -திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற அற்புதத் தலமாகவும், அருணகிரிநாதர், அருட்பிரகாச வள்ளலார், சிவப்பிரகாசர் போன்ற சான்றோர்களால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஆற்றங்கரை ஓரம் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தொண்டை மண்டலத்தில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற 8வது திருத்தலமாக விளங்குகிறது.

இந்தக் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை  கிராம தேவதையான காங்கியம்மன் சிம்ம வாகனத்திலும், சனிக்கிழமை விநாயகா் மூஷிக வாகனத்திலும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

அதனைத் தொடா்ந்து  காலை உற்சவ மூா்த்திகளான வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே எழுந்தருளினா். அப்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, மங்கல இசை மற்றும் சிவ வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.  அப்போது, திராளான பத்கா்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமியை தரிசித்தனா்

27-ந் தேதி காலை சந்திரசேகர சுவாமி அபிஷேகம், 63 நாயன்மார்கள் திருவீதி உலாவும், இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண யானை வாகன சேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 28-ந் தேதி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை சந்திரசேகர் சுவாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும், 30-ந் தேதி அதிகார நந்தி வாகன சேவையும் நடைபெறுகிறது. 

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News