செய்யாறு அருகே கால்வாய் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்;

Update: 2021-10-16 08:45 GMT

அசனமாப்பேட்டை கால்வாய் தூர்வாரும் பணி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏரி போக்கு கால்வாய் முறையாக பராமரிக்காததால் ஆங்காங்கு அடைப்பு ஏற்பட்டு மழை பெய்து தண்ணீர் வீணாக செல்கிறது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,  அறிவுரையின் பேரில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி,  மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன்  ஆகியோர் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மோரணம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பிடிஓ கோபால கிருஷ்ணனிடம் வலியுறுத்தினார்.

பின்னர் வடமணப்பாக்கம் ஏரி நீர் நிரம்பி வழியும் உபரி நீர் செல்லும் பிரதான கால்வாயை ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை பொறியாளர்கள், உதவியாளர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மற்றும் செய்யாறு நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News