செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

செய்யாறில் பஞ்சாப் முதலமைச்சைர கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-09 02:03 GMT

செய்யாறில் பஞ்சாப் முதல்-மந்திரியை கண்டித்து பா.ஜ.க.வினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஜே.கே.சுப்பிரமணி தலைமை தாங்கினார். பா.ஜ.க. நிர்வாகிகள் கார்த்திகேயன், பாஸ்கரன், மண்ணரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் பங்கேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில முதலமைச்சரை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News