தடை செய்யப்பட்ட 110 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

செய்யாறில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன;

Update: 2022-08-06 13:54 GMT

செய்யாறு பகுதியில் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள்

தமிழக அரசின் உத்தரவின்படி தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திட செய்யாறு டவுன் வணிக வளாகங்களில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் துப்புரவு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவத்திபுரம் நகராட்சி எல்லை குட்பட்ட லோகநாதன் தெரு, முகமது பேட்டை, பேருந்து நிலையம், அனுமந்தன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது 110 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 8 வணிகர்களுக்கு ரூபாய் 7000 அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News