காவல் நிலைய மரணங்களை தவிர்ப்பது சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம்

Tamilnadu Police Department -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-15 01:44 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.

Tamilnadu Police Department - திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் திருவண்ணாமலை நகரம், திருவண்ணாமலை கிராமியம், செங்கம் மற்றும் போளூர் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் செய்யாறு பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆரணி உட்கோட்ட காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,  குற்றவாளிகளை கைது செய்யும்போதும் காவல் நிலைய பாதுகாப்பில் வைத்திருக்கும்போதும் காவல் நிலைய மரணங்களை (Custodial Death) தவிர்க்க பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

காவல் நிலையங்களில் மாலை 6 மணிக்கு மேல் கைகளை வைக்கக் கூடாது புகார் அளிக்க வரும் நபர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். புகார்கள் மீது தீர்வுகள் ஏற்படுத்தித் தரவேண்டும். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடாது.

பஜார் வீதிகளில் சாலையோரக் கடைகளை தவறாக வழி நடத்துவதால் ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவ்வாறு ஒழுங்கீனமாக காவலர்கள் நடந்து கொள்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவர் என எச்சரித்தார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News