என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம்

Awareness march that my garbage is my responsibility;

Update: 2022-06-12 05:24 GMT

ஆரணி நகராட்சியில் , எனது குப்பை எனது பொறுப்பு என கோலமிட்டு தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

வந்தவாசியில் நகராட்சி சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குப்பையை தரம் பிரித்திடுவோம். சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம் என்ற துண்டு பிரசுரங்களை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் அலுவலர் பழனி மேற்பார்வையாளர்கள் ஏசுபாதம், லோகநாதன் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் குப்பை இல்லாத தூய்மை நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் நகராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து அரிமா சங்க பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் நளினி பங்கேற்றார்.

பேருந்து நிலையப் பகுதியில் இருந்து மரம் செடிகொடிகளை அகற்றினர். அசுத்தமான நிலையிலிருந்த கழிப்பறைகளை சுத்தப்படுத்தினார்.மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுண்ணாம்பு நீர் தெளித்து சுத்தப்படுத்தினார்.இந்த தூய்மைப் பணியில் நகராட்சி நிர்வாக பணியாளர்கள், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், என்சிசி மாணவர்கள், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி: ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் மணி, ஆணையர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.தெருக்களில் வண்ண கோலமிட்டு அப்பகுதியை தூய்மையாக வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News