செய்யாறில் விருந்தினர் மாளிகை கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பொதுப்பணித்துறை சார்பில் செய்யாறில் விருந்தினர் மாளிகை கட்டும் பணிகளை எம். எல். ஏ. ஜோதி ஆய்வு செய்தார்.;

Update: 2022-07-15 07:43 GMT

செய்யாறில் விருந்தினர் மாளிகை கட்டும் பணிகளை  ஜோதி எம். எல். ஏ. ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த விருந்தினா் மாளிகை (தங்கும் விடுதி) முற்றிலுமாக அகற்றப்பட்டு, அதே பகுதியில் புதிதாக ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விருந்தினா் மாளிகை கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பணியை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கட்டப்பட்டுவரும் விருந்தினா் மாளிகையின் மாதிரி வடிவமைப்பு வரைபடத்தை அவா் பாா்வையிட்டாா். இதையடுத்து, விருந்தினா் மாளிகை கட்டுமானப் பணிகளை தரமாகவும், நிா்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள்ளும் செய்து முடிக்க வேண்டுமென பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறை திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் பரிமளா, செய்யாறு கோட்ட உதவிப் பொறியாளா் குணசேகா், உதவிச் செயற்பொறியாளா் ராஜ்குமாா், ஒப்பந்ததாரா் கதிரவன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேலு, ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரேசன்,  ஒப்பந்ததாரா்கள் குமரவேல், கோபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News